Poem · Tamil · 8 Oct 2026

விதைத்தவனின் ரகசியம்

A poem by Kaviyaalan

வேதங்கள் பூமியில் விதைத்தான் பல கோடி அர்த்தங்கள் விளைந்தன அர்த்தங்கள் விளக்க ஒரு கூட்டம் அதைக் கேட்டு வியக்க பல கூட்டம் அறிந்தோர் உடமையாக்கிக் கொண்டார்கள் புரிந்தோர் உரிமையாக்கிக் கொண்டார்கள் விதைத்தவனுக்கே அதன் ரகசியம் தெரியும் விளைந்த அர்த்தங்களை தெரியாமல் விற்க ஒரு கூட்டம் அதை வாங்கிப் புரியாமல் உண்ணும் ஒரு கூட்டம் உண்போர்க்கு சொர்க்க வாசல் கேள்வி கேட்போர்க்கு நரக வாசல் எதை ஏற்கும் நம் மனவாசல்?